உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு வண்ண சீருடை

மாணவர்களுக்கு வண்ண சீருடை

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி வார்டு எண், 32ல் உள்ள புது ராமகிருஷ்ணாபுரம் துவக்கப் பள்ளியில், 328 மணவர்கள் கல்வி பயில்கின்றனர்.'பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டு சீருடை வேண்டும்' என்ற கோரிக்கையை, அப்பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் நடராஜன், பனியன் கம்பெனி நடத்தி வரும் வாசுதேவன் ஆகியோரிடம், தலைமையாசிரியர் முறையிட்டார்.அதன் பலனாக நடராஜன், 40 ஆயிரம் ரூபாய்; வாசுதேவன், 14 ஆயிரம் ரூபாய் என, 54 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினர். இதில் பள்ளி குழந்தைகளுக்கு வண்ண சீருடை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாநகராட்சி வார்டு கவுன்சிலர் கோவிந்தராஜ், புதிய விளையாட்டு சீருடைகளை அறிமுகப்படுத்தி, மாணவர்களுக்கு வழங்கினார். விழாவில், பள்ளி வளர்ச்சிக்குழு பொறுப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) மோகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை