உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

உடுமலை;பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, ஆர்.கே.ஆர்., கல்வி குழுமத்தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் மாலா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 4, வணிகவியலில் 2, பொருளியல், வணிக கணிதம், கணினி பயன்பாடு உள்ளிட்ட பாடங்களில் தலா ஒருவரும் சதம் பெற்றுள்ளனர்.40 மாணவர்கள் 500க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். மூன்று மாணவர்கள், 589 மதிப்பெண் பெற்றுள்ளனர். 550க்கு மேல் 11 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை