உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியில் பொருள் சேதம்: போலீசார் விசாரணை

பள்ளியில் பொருள் சேதம்: போலீசார் விசாரணை

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் அத்துமீறி நுழையும் நபர்களால், பள்ளியில் உள்ள பொருட்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருவது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைபள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி தரத்திலும், அவர்களின் எதிர்காலத்துக்கும் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.கடந்தாண்டு பள்ளியில் புதிய கலையரங்கம் கட்டி திறக்கப்பட்டது. தற்போது, கோடை விடுமுறையால் பள்ளி வளாகத்துக்குள் வெளிநபர்கள் அத்துமீறி நுழைவது அரங்கேறி வருகிறது. ஏப்., 27ம் தேதி புதியதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்துக்கு பின் உள்ள காலி இடத்தில் இருந்த இலை தழைகளுக்கு உள்ளே புகுந்த நபர்கள் தீ வைத்து சென்றனர்.இதனை பார்த்த காவலாளி உள்ளிட்டோர் தீயை அணைத்தனர். அங்கு அத்துமீறி நுழைந்து உள்ளே கிரிக்கெட் விளையாட வரும் சிறுவர்களால், அழகுக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள், அழகிய கண்ணாடி போன்றவை உடைந்து வருகிறது.இதுகுறித்து காவலாளி சிறுவர்களிடம் எச்சரிக்கை செய்தாலும், தொடர்ந்து பள்ளியில் உள்ள உடமைகள் சேதப்படுத்தப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து பள்ளி தரப்பில் புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ