உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சேதமான பாலம்; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

சேதமான பாலம்; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

திருப்பூர் : திருப்பூர் - சோமனுார் ரயில் வழித்தடத்தில், கணியாம்பூண்டி, காவிலிபாளையம் பிரிவு அருகே ரயில்வே பாலம் உள்ளது. ஈரோடு - கோவை இடையே ரயில்பாதை அமைக்கப்பட்ட போது இப்பாலம் கட்டப்பட்டது.மழை பெய்யும் போதெல்லாம், மழைநீர் வழிந்தோடி பாலத்தின் கீழ் அதிகளவில் மண் இறுகி விட்டது. விதிமீறி அதிக பாரம், உயரத்துடன் இவ்வழியை கடக்க முயன்ற கனரக வாகனங்கள் பாலத்தின் மேல்தளத்தை பதம் பார்த்து, சேதப்படுத்தியுள்ளன. கற்கள் பெயர்ந்துள்ளதால், பாதுகாப்பு கருதி, இப்பாலத்தை உயரமான வாகனங்கள் கடந்து செல்ல ரயில்வே தடைவிதித்துள்ளது.வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலக மைதானம் செல்லும் வழியில் உள்ள இப்பாலத்தின் முன், பாலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், 'இந்த பாலத்தில் உயரமான வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ரயில்வே,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரமான வாகனங்கள் நுழையாத படி, இரும்பு தடுப்புகளும் நிறுவப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை