| ADDED : ஏப் 27, 2024 12:22 AM
உடுமலை;உடுமலை, ஜி.டி.வி., லே அவுட் செல்வ விநாயகர் கோவிலில், காஞ்சி மஹா பெரியவா அனுஷ பூஜை நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.உடுமலையில், கோவில்களில் அவ்வப்போது மஹா பெரியவா அனுஷ பூஜை நடந்து வருகிறது.உடுமலை ஜி.டி.வி., லே அவுட்டில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் காஞ்சி மஹா பெரியவா அனுஷ பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் வழிபாடு துவங்கியது. காலையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.மாலையில் அனுஷ நட்சத்திர பூஜை, வேத பாராயணம், குரு வந்தன பூஜை, சிவபுராணம், கோளாறு பதிப்பதிகம், நாம சங்கீர்த்தனம், திருத்தொண்டர் தொகை, விநாயகர் அகவல் பாராயணம் நடந்தது. உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் கூட்டு வழிபாடு நடந்தது.இந்நிகழ்ச்சியில், உடுமலை, போடிபட்டி, காந்திநகர் உட்பட நகரப்பகுதிகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் காஞ்சி மஹா பெரியவா அனுஷ பூஜை வழிபாடு மேற்கொண்டனர். அனுஷ பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.