உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்

மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்

உடுமலை : ஒப்பந்த பணியாளர்களுக்கு முறையாக தொடர்ச்சியான பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், உடுமலையில், தர்ணா போராட்டம் நடந்தது.உடுமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு, மின் வட்ட கிளைத்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மண்டலச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், காடம்பாறை கிளை தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.போராட்டத்தில், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு, கருணைத்தொகை வழங்க வேண்டும்; ஒப்புக்கொண்ட ஒப்பந்தப்படி தினக்கூலியை வாரியமே வழங்க வேண்டும்.காலியாக உள்ள களப்பணியில், பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.ஒப்பந்த பணியாளர்களுக்கு முறையாக தொடர்ச்சியான பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத்தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பேசினர். போராட்டத்தில், உடுமலை, காடம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த ஒப்பந்த பணியாளர்கள், குடும்பத்துடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ