உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேரிடர் கால முதலுதவி பயிற்சி

பேரிடர் கால முதலுதவி பயிற்சி

இந்திய மருத்துவ சங்கம் டெக்ஸ் சிட்டி கிளை சார்பில், பேரிடர் காலங்களில் முதலுதவி வழங்குவது குறித்த செயல்முறை பயிற்சி முகாம் நேற்று நடந்தது. அவிநாசி ரோட்டில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலைய வளாகத்தில் இப்பயிற்சி, தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்டது. சங்க தலைவர் ஏஜாஸ் அன்சாரி தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, தேசிய குழு உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் அண்ணாதுரை, கூடுதல் அலுவலர் இளஞ்செழியன், நிலைய அலுவலர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தீயணைப்பு வீரர்களுக்கு, டாக்டர் பாலமுரளி, பவித்ரா மற்றும் குழுவினர் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை