உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கரைந்து வரும் கான்கிரீட் ரோடு

கரைந்து வரும் கான்கிரீட் ரோடு

பல்லடம்:கரடிவாவியில், புதிதாக போடப்பட்ட கான்கிரீட் ரோடு மழையில் கரைந்து வருவதால், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.பல்லடம் ஒன்றியம், கரடிவாவி ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் மரக்கடை அருகிலுள்ள ரோடு, 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 7.47 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் சாலை போடப்பட்டது. இதேபோல், இதற்கு அடுத்த வீதியிலும் புதிதாக காங்கிரீட் சாலை போடப்பட்டது. சாலை போடப்பட்டு மூன்று மாதமே ஆன நிலையில், ஜல்லிகள் சிறிது சிறிதாக பெயர்ந்து வருகின்றன.அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: பல லட்சம் ரூபாய் செலவு செய்து போடப்பட்ட கான்கிரீட் சாலைகள் தரமானதாக இல்லை. மூன்று மாதமே ஆன நிலையில், கான்கிரீட்டில் உள்ள ஜல்லிக்கற்கள் சிறிது சிறிதாக பெயர்ந்து வருகின்றன. இதேபோல், அருகில் போடப்பட்ட மற்றொரு கான்கிரீட் சாலையில், சிமெண்ட் பூச்சுகள் மழையில் கரைந்து ஜல்லிகள் மட்டுமே வெளியே தெரிகின்றன.மூன்று மாதத்திலேயே இந்த நிலை என்றால், எதிர்வரும் நாட்களில், சிமென்ட் பூச்சுகள் அனைத்தும் கரைந்து, காங்கிரீட் ரோடு மேடு பள்ளமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை. ரோடு முழுவதும் ஜல்லிகற்கள் சிதறி கிடப்பதால் வாகனம் ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.புதிதாக ரோடு போட்டால், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே மீண்டும் அப்பகுதியில் ரோடு போட முடியும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இந்த காங்கிரீட் ரோடு ஐந்து ஆண்டுகள் தாக்குபிடிக்குமா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே, தரமின்றி போடப்பட்ட இந்த ரோடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ரோடு சேதம் அடையாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை