உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டி

மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டி

உடுமலை;உடுமலையில், இன்று மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடக்கிறது.தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு ஹாக்கி லீக் போட்டி அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை ஒன்றியம் குறிச்சிக்கோட்டையில் உள்ள ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளியில், போட்டி இன்றும் நாளையும் நடக்கிறது.போட்டி நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடக்கிறது. இப்போட்டியில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி, லுார்துமாதா மேல்நிலைப்பள்ளி, உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, மானுார்பாளையம் ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளி உட்பட ஏழு அணிகள் பங்கேற்கின்றன.இப்போட்டிகளை, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல் ஒருங்கிணைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை