உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர்

அனுப்பர்பாளையம்:-திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, எஸ்.பி., நகரில் உள்ள சிறுபூலுவபட்டி, அம்மன் நகர், திருஆவினன்குடி, ஏ.டி., காலனி ஆகிய பகுதிகளில் இருந்து அடித்து வரப்படும் கழிவுநீர் எஸ்.பி., காலனியில் சாக்கடை கால்வாயில் இருந்து வெளியேறி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், கால்வாயை விரிவுப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று காலை, கழிவுநீர் எஸ்.பி., நகர், 2வது வீதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், ஆவேசமுற்ற மக்கள் மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். இதையறிந்த அதிகாரிகள், துப்புரவு பணியாளர்களை கொண்டு, துார்வாரி கழிவுநீரை வெளியேற்றினர். இதனால், மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி