உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தவறான வரி விலக்கு கோர வேண்டாம்! இணை கமிஷனர் அறிவுறுத்தல்

தவறான வரி விலக்கு கோர வேண்டாம்! இணை கமிஷனர் அறிவுறுத்தல்

திருப்பூர் : வருமான வரி செலுத்துவோர் தவறான வரி விலக்குகளை கோரி படிவம் தாக்கல் செய்யக் கூடாது என, வருமான வரித்துறை இணை கமிஷனர் தெரிவித்தார்.திருப்பூர் வருமான வரித்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில், 165 வது வருமான வரி நாள் கொண்டாட்டம் நடந்தது. இணை கமிஷனர் மாணிக்கராஜ் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் கிறிஸ்துராஜ் வரவேற்றார்.நிகழ்ச்சியில், திருப்பூர் சரகத்தில் தனி நபர் வருமான வரி செலுத்தும் முதல் மூன்று மூத்த வரி செலுத்துவோர் கவுரவிக்கப்பட்டனர். அவ்வகையில், சையது முகமது, சின்னையா அருணாசலம், செல்லையா சந்திரமோகன் ஆகிய வருமான வரி செலுத்தும் மூன்று பேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, வருமான வரித்துறை சார்பில், நடந்த கட்டுரை போட்டியில் பரிசு பெற்ற குமரன் கல்லுாரி மாணவியர் மூன்று பேருக்கு பரிசுகளும், பங்கேற்ற மற்ற மாணவியருக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.இணை கமிஷனர் பேசுகையில், 'வருமான வரி தாக்கல் செய்யும் விண்ணப்பதாரர்கள், போலியான வருமான வரி விலக்குகளை கணக்கில் காட்டி விலக்கு கோரக் கூடாது. தவறான வரி விலக்குகளை கோரும் விண்ணப்பதாரர்களை வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். துறை அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தர வேண்டும்,' என்றார்.வருமான வரி அலுவலர் பிரேமலதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை