| ADDED : மே 31, 2024 07:13 PM
திருப்பூர்:நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, நேற்று நடந்தது.கடந்த 2017, ஜூன் மாதம், திருப்பூர் நஞ்சப்பா பள்ளி தலைமை ஆசிரியராக பழனிசாமி பொறுப்பேற்றார். இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது.காலையில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் இணைந்து தலைமை ஆசிரியருடன் போட்டோ எடுத்து, சால்வை, புத்தகம் வழங்கி, பாராட்டுகளை தெரிவித்தனர்.மாநகராட்சி கல்விக்குழு தலைவர் திவாகரன், ஆர்.ஆர்.எஸ்., கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்று, சால்வை அணிவித்தனர். மாலை முன்னாள் மாணவர்கள் அமைப்பு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சிக் குழு, நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டுக்குழு சார்பில் தலைமை ஆசிரியர் பழனிசாமி கவுரவிக்கப்பட்டார்.பள்ளி மேலாண்மை குழு சார்பில் கேக் வெட்டி, அனைவருக்கும் வழங்கப்பட்டது. டிரம்ஸ் வாத்தியத்துடன், பள்ளியில் இருந்து கலையரங்கத்துக்கு தலைமை ஆசிரியர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அங்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. முன்னதாக தி சென்னை சில்க்ஸ் குழுமம் சார்பில், தலைமை ஆசிரியருக்கு ஒன்றரையடி வெள்ளிவேல் பரிசாக வழங்கப்பட்டது.அவிநாசி அடுத்த தெக்கலுார் பழனிசாமியின் சொந்த ஊர். அவிநாசி, ராக்கியாபாளையம் பள்ளி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். 2018ல் மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இவர், தமிழ்நாடு தமிழ் சங்க விருதும் பெற்றுள்ளார்.தலைமை ஆசிரியருடன் இணைந்து, பள்ளி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர் மதிவாணன், பட்டதாரி ஆசிரியர் ரிச்சர்ட் நெல்சன் இருவரும் ஓய்வு பெற்றனர்.