உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வயநாடு மக்கள் நலன் வேண்டி ஏகாதச ருத்ர ஜப பாராயணம்

வயநாடு மக்கள் நலன் வேண்டி ஏகாதச ருத்ர ஜப பாராயணம்

திருப்பூர்:வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் நலன் வேண்டி, ஏகாதச ருத்ரஜப பாராயணம் நேற்று நடந்தது. திருப்பூர் ஐயப்பன் கோவில், ஸ்ரீஐயப்பன் பக்த ஜனசங்கம் மற்றும் ஸ்ரீகாஞ்சிகாமகோடி பீடத்தின் திருப்பூர் மடம் சார்பில், ஏகாதச ருத்ரஜப பாராயணம் நடந்தது. உலக நலன் வேண்டியும், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் நலன் வேண்டியும் பிரார்த்திக்கப்பட்டது.ஸ்ரீஐயப்பன் பக்த ஜனசங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ