உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் தேர்த்திருவிழா : ஆலோசனை கூட்டம்

திருப்பூரில் தேர்த்திருவிழா : ஆலோசனை கூட்டம்

திருப்பூர்:வைகாசி விசாக தேர்த்திருவிழா ஆலோசனை கூட்டம், நாளை ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் நடக்கிறது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, 16ம் தேதி துவங்கி, 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம், அறங்காவலர் குழு, சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.திருப்பூர் நகரில் உள்ள, மிகவும் பழமையான, பாண்டவர்களால் வழிபாடு நடத்தப்பட்டது, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில். இங்கு மட்டுமே, சிவன் மற்றும் பெருமாள் கோவில் தேர்களுக்கு ஒரே நேரத்தில் திருவிழா நடத்தப்படுகிறது.தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஊர் பொதுமக்கள், கட்டளைதாரர்கள் ஆலோசனை கூட்டம், நாளை (8ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில் நடக்க உள்ளது. அனைத்து சமுதாய மக்களும், பக்தர்களும் பங்கேற்று, தங்களது மேலான ஆலோசனைகளை வழங்கி, தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டுமென, கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழு அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை