உள்ளூர் செய்திகள்

மின் அதிகாரி கைது

பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் பைஜ் அகமது, 39, இவருக்கு சொந்தமான, 1,300 சதுர அடி இடத்தில் கட்டடம் கட்டி உள்ளார். மே மாதம் நிரந்தர மின் இணைப்புக்காக விண்ணப்பித்தார். இதற்காக, பைஜ் அகமதை தொடர்பு கொண்ட மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ்பாபு, மின் இணைப்புக்காக 5,000 ரூபாய் லஞ்சமாக வழங்குமாறும் கூறியுள்ளார். பைஜ் அகமது புகாரின் படி, லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ரசாயனம் தடவிய 5,000 ரூபாயை, சுரேஷ்பாபு பெறும்போது அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை