உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடிப்பெருக்கு தினத்தில் உற்சாகம் அமராவதியில் முளைப்பாரி வழிபாடு

ஆடிப்பெருக்கு தினத்தில் உற்சாகம் அமராவதியில் முளைப்பாரி வழிபாடு

உடுமலை:உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களில், ஆடிப்பெருக்கு தினமான நேற்று, பாரம்பரிய முறையில் முளைப்பாரி விட்டு மக்கள் வழிபட்டனர்.ஆடிப்பெருக்கு தினத்தில், உடுமலை அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களில், உலக உயிரினங்கள் வாழ ஆதாரமாக உள்ள நீர் நிலைகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயம் செழிக்க, ஆண்டு முழுவதும் நீர் வளம் பெருக, அமராவதி ஆற்றில் பாரம்பரிய முறையில் மக்கள் வழிபடுகின்றனர்.சாகுபடிக்கு ஆதாரமாக உள்ள விதைகளான, நெல், நவ தானியங்களில், ஆடி முதல்நாள், முளைப்பாரி இட்டு, 18ம் நாள், அமராவதி ஆற்றுக்கு, பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக கொண்டு வருகின்றனர்.ஆற்றின் கரையில், கன்னிமார் பூஜை செய்து, புதுமணத்தம்பதிகள் தாலிச்சரடு மாற்றியும், முளைப்பாரியை வழிபட்டு, அமராவதி அன்னைக்கு முளைப்பாரி இடுகின்றனர்.உற்றார், உறவினர்களுடன் உற்சாகமாக, அமராவதி ஆற்றின் வழியோர கிராமங்களான, கல்லாபுரம், கொழுமம், குமரலிங்கம், கண்ணாடிபுத்துார், கணியூர், கடத்துார், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், பாரம்பரியமாக இன்றளவும், ஆடிப்பெருக்கு தினம் கொண்டாடப்படுகிறது.நடப்பாண்டு, அமராவதி அணை நிரம்பி, ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு நீர் ஓடிவருவதால், வழியோர கிராம மக்கள் ஆடிப்பெருக்கை உற்சாகத்துடன் கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை