உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இ.எஸ்.ஐ., மருத்துவமனை பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும்! தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்

இ.எஸ்.ஐ., மருத்துவமனை பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும்! தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்

திருப்பூர்:திருப்பூரில் படுக்கை வசதியுடன் கட்டிமுடிக்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என, அனைத்து பனியன் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்க கூட்டம், பி.என்., ரோட்டில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி., அலுலகத்தில் நேற்று நடைபெற்றது. பனியன் பேக்டரி லேபர் யூனியன் சங்க பொதுச்செயலாளர் சேகர் தலைமைவகித்தார்.திருப்பூர் மாவட்டத்தில்ல 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன; 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர் பணிபுரிகின்றனர். சில நிறுவனங்கள் மட்டுமே தொழிலாளர் நல சட்டங்களை முறையாக செயல்படுத்துகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள், தொழிலாளர், தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்துவதில்லை.அனைத்து பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிலும் தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும். பல நிறுவனங்கள் இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடித்தம் செய்வதில்லை. அந்நிறுவனங்களில் ஆய்வு செய்து, பீஸ்ரேட், ஒப்பந்த தொழிலாளர் அனைவரையும் இ.எஸ்.ஐ., - பி.எப்., திட்டங்களில் இணைக்க வேண்டும்.தொழிற்சாலை சட்டப்படியான வேலை நேரத்தை அமல்படுத்தவேண்டும்; கூடுதல் வேலைக்கு, இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும். சட்டவிரோதமாக ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணி அமர்த்தியுள்ள பனியன் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். திருப்பூரில் படுக்கை வசதியுடன் கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சி.ஐ.டி.யு., பனியன் சங்க பொதுச்செயலாளர் சம்பத், எல்.பி.எப்., தலைவர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் பூபதி, ஐ.என்.டி.யு.சி., தலைவர் பெருமாள், செயலாளர் சிவசாமி, எச்.எம்.எஸ்., பொதுச்செயலாளர் முத்துசாமி, எம்.எல்.எப்., தலைவர் சம்பத் உள்பட அனைத்து பனியன் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.----------திருப்பூர், பி.என்., ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில், பனியன் தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை