உள்ளூர் செய்திகள்

விவசாயி பலி

பொங்கலுார் : பொங்கலுார் ஒன்றியம், திருமலை நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார், 50; விவசாயி. நேற்று முன்தினம் இரவு மனைவி கலாவுடன் பொங்கலுார் - காட்டூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதி தம்பதியருக்கு காயம் ஏற்பட்டது.அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருந்த சசிகுமார் நேற்று இறந்தார். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை