உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மும்முனை மின்சாரம் தடை: விவசாயிகள் எதிர்ப்பு

மும்முனை மின்சாரம் தடை: விவசாயிகள் எதிர்ப்பு

திருப்பூர்;அவிநாசி சுற்றுப்பகுதியில் விவசாய மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் தடை செய்யப்பட்டதைக் கண்டித்து, நாளை கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு மனு அளிக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.அவிநாசி மின் பகிர்மானத்துக்கு உட்பட்ட சேவூர், கருவலுார் ஆகிய பகுதிகளில் கடந்த 19ம் தேதி முதல் விவசாய மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால், இப்பகுதியில் தென்னை, வாழை, கரும்பு, காய்கறி, மரவள்ளி உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.முறையாக நீர் பாய்ச்சாமல் இவை கருகி வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தண்டுக்காரன்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு விவசாயிகள் ஆலோசனை நடத்தினர்.அதன்படி நாளை, 29ம் தேதி, திருப்பூர் கலெக்டர் அலுவலத்தில் அவிநாசி சுற்றுப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாட்டினை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை