உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்நடைகளை விற்பனை செய்யும் விவசாயிகள்

கால்நடைகளை விற்பனை செய்யும் விவசாயிகள்

பொங்கலுார்;திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழையின்றி வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் வற்றி வருவதால், தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. விவசாயிகள் புதிது புதிதாக பல லட்சம் ரூபாய் செலவில் ஆழ்குழாய் கிணறுகளை தோண்டி வருகின்றனர். தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகளின் முயற்சி வீணாகி வருகிறது. பசுந்தீவனங்கள் காய்ந்து வருகிறது. கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடர் மற்றும் உலர் தீவனங்கள், கழிவுப்பஞ்சு போன்றவற்றை விவசாயிகள் அதிக விலைக்கு வாங்கி கொடுத்து நிலைமையை சமாளித்து வந்தனர். தற்பொழுது செலவுகளை சமாளிக்க முடியாததால் கால்நடைகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வளர்ப்புக்காக மேய்த்து வந்த கன்றுகளை கூட விற்பனை செய்கின்றனர். இவற்றில் பெரும் பகுதி அடி மாடுகளுக்காக கேரளாவிற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி