உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பறவைகளால் சேதம்: விரட்டும் விவசாயிகள்

பறவைகளால் சேதம்: விரட்டும் விவசாயிகள்

பொங்கலுார்:தற்பொழுது தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் பயிர் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. சுரைக்காய், பீர்க்கன், தக்காளி, மிளகாய், கம்பு, மக்காச் சோளம் உள்ளிட்ட பயிர்கள் குறைந்த அளவிலேயே சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.பரவலாக பயிர் சாகுபடி செய்யப்பட்டு இருந்தால் பறவைகளால் ஏற்படும் சேதம் குறைவாக இருக்கும். குறைந்த பரப்பில் பயிர் சாகுபடி நடப்பதால் பறவைகளுக்கு கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மயில், கிளி உள்ளிட்ட பறவைகள் கிடைத்ததை எல்லாம் சாப்பிடுகின்றன. பறவைகளை விரட்டும் பணியில் விவசாயிகள் முழு நேரமாக ஈடுபட்டுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: இதற்கு முன் பறவைகள் பருப்பு வகைகள், தானியங்கள், பழம் போன்றவற்றை மட்டுமே சாப்பிட்டு வந்தன. உணவு கிடைக்காததால் செடிகள் முளைத்தவுடன் அதன் இலைகளையும் சாப்பிடுகின்றன. குறிப்பாக பீர்க்கன் போன்ற செடிகளை முழுமையாக சாப்பிட்டு விடுகிறது.இதனால், செடிகள் பட்டு போய் விடுகின்றன. மிளகாய்களையும் கூட விட்டு வைப்பதில்லை. மேலும் அரசாணி, சுரை போன்றவற்றை கொத்தி சேதப்படுத்தி விடுகின்றன. ஒரே காய்களை முழுமையாக சாப்பிட்டால் கூட பரவாயில்லை. பல்வேறு காய்களை சிறிய அளவில் சேதப்படுத்தி விடுகின்றன. பறவைகளால் சேதமான காய்களை சந்தையில் விற்க முடிவதில்லை. முன்பெல்லாம் காலை, மாலை நேரங்களில் மட்டும் விரட்டிவிட்டு பிற வேலைகளை பார்க்க சென்று விடுவோம். தற்போது அதை முழு நேரமாக செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ