உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண் தற்கொலை: வாலிபர் கைது

பெண் தற்கொலை: வாலிபர் கைது

திருப்பூர்:தாராபுரம், அலங்கியத்தை சேர்ந்தவர் ஷர்புநிஷா, 21; கல்லுாரி படிப்பு முடித்து விட்டு, எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வந்தார். மற்றொரு கடையில் வேலை செய்து வந்த ஸ்ரீதர், 24 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆறு மாதங்களாக காதலித்து வந்தனர். காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. ஸ்ரீதரின் தந்தை திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார். இதை ஸ்ரீதர், ஷர்புநிஷாவுக்கு தெரிவித்தார். மனமுடைந்த ஷர்புனிசா, கடந்த 12ம் தேதி வீட்டில் குளிர்பானத்தில் மாத்திரையை கலந்து குடித்ததில் பலியானார். அலங்கியம் போலீசார் வழக்கு பதிந்து, திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதால் ஷர்புனிஷா தற்கொலை செய்துகொண்டதால், தற்கொலைக்கு துாண்டியதாக ஸ்ரீதரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை