உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோழிக்குஞ்சுகளை விற்று மோசடி? பண்ணையாளர்கள் போலீசில் புகார்

கோழிக்குஞ்சுகளை விற்று மோசடி? பண்ணையாளர்கள் போலீசில் புகார்

பல்லடம்;சூலுார், சரஸ்வதி நகரை சேர்ந்தவர் கங்கா ரவி கிருஷ்ணன், 31. பல்லடம் அருகே ஆறாக்குளம் பிரிவில் உள்ள கறிக்கோழி பண்ணை ஒன்றில் சூப்பர்வைசர். இதே பண்ணையில், குறளரசன், 29 என்பவர், தொழிலாளியாக வேலை பார்த்தார்.பண்ணையில் இருந்து செல்லும் கோழிக்குஞ்சுகள் எண்ணிக்கையில் குறைவதாக உரிமையாளருக்கு அடிக்கடி புகார் வந்தது. அவர் விசாரித்ததில், இருவரும் இணைந்து, விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் கோழிக்குஞ்சுகளில் சிலவற்றை தனியே எடுத்து, கேரளாவைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து, பண்ணை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.பல்லடம் ஸ்டேஷனுக்கு வந்த கறிக்கோழி பண்ணையாளர்கள் சிலர் கூறுகையில், ''இருவரது தொடர்பில், வேறு பண்ணைகளிலும், கோழிக்குஞ்சுகள் விற்கப்பட்டு முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. இதுகுறித்து முழுமையாக விசாரித்து, முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக போலீசிலும் புகார் கொடுத்துள்ளோம்'' என்றனர்.இதையடுத்து, கங்கா ரவி கிருஷ்ணன், குறளரசன் மற்றும் கேரளாவை சேர்ந்த ஒருவரை, பல்லடம் போலீசார் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.---பல்லடம் போலீசில் புகார் அளித்த கறிக்கோழி பண்ணையாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி