உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண்டல அளவிலான ஹாக்கி போட்டிக்கு அரசு பள்ளி தகுதி

மண்டல அளவிலான ஹாக்கி போட்டிக்கு அரசு பள்ளி தகுதி

உடுமலை;உடுமலையில் நடந்த, மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டியில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டி குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் மாவட்ட அளவில், பத்துக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் நடந்தது. இறுதியில் நடந்த மூன்று லீக் சுற்றிலும் வெற்றி பெற்று, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி, மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.திருப்பூர் செஞ்சுரி பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் பாராட்டு தெரிவித்தார்.தொடர்ந்து மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் மோகன்குமார், முன்னாள் மாநில ஹாக்கி வீரர் திருவிநோதன் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினர்.போட்டியில் சிறப்பாக விளையாடி வீரர்களாக யோகேந்திரன், நித்தீஷ், சஞ்சய் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டி இயக்குனர் மனோகரன் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.வெற்றி பெற்ற அணியினருக்கு, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை