உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கலை கல்லுாரியில் இன்று பட்டமளிப்பு விழா

அரசு கலை கல்லுாரியில் இன்று பட்டமளிப்பு விழா

உடுமலை:உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது.உடுமலை அருகே எலையமுத்துார் ரோட்டில் அரசு கலைக்கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில் 2022-23 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கான, 49வது பட்டமளிப்பு விழா இன்று (3ம் தேதி) காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகிக்கிறார். கோவை மண்டலம் கல்லுாரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !