உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கசந்தது மாற்றிடத்தில் நடந்த குறைதீர் கூட்டம்; விவசாயிகள் குறைந்தளவே பங்கேற்பு

கசந்தது மாற்றிடத்தில் நடந்த குறைதீர் கூட்டம்; விவசாயிகள் குறைந்தளவே பங்கேற்பு

திருப்பூர் : கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தை, திருப்பூர் சப் கலெக்டர் அலுவலகத்திலேயே நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நேற்று தெற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் 11 பேர் மட்டுமே பங்கேற்றனர்.திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களை உள்ளடக்கியது திருப்பூர் வருவாய் கோட்டம். திருப்பூர் - குமரன் ரோட்டிலுள்ள சப் - கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பது வழக்கம். நேற்றைய குறைகேட்பு கூட்டம், செவந்தாம் பாளையத்திலுள்ள திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் நடத்தப்பட்டது. குறைந்தது இரண்டு பஸ் பிடித்தால் மட்டுமே இந்த அலுவலகத்துக்கு செல்லமுடியும்; ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட தொலை துார பகுதி விவசாயிகள் நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அரங்கில், வெறும் 11 விவசாயிகள் மட்டுமே அமர்ந்திருந்தனர். முந்தைய குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்த விவசாயிகள் பலர், பங்கேற்கவில்லை. அனைவரும் பங்கேற்க ஏதுவாக, குறைகேட்பு கூட்டத்தை கோட்ட தலைமையிடமான சப்கலெக்டர் அலுவலகத்திலேயே தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.---திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் சப் கலெக்டர் சவுமியா தலைமையில் நடந்த கோட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தில் நேற்று குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே பங்கேற்றனர்.

சடங்காகக் கூடாது

நேற்றைய கூட்டத்தில் கால்நடை, கூட்டுறவு துறை சார்ந்த விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க, அந்த துறை சார்ந்தோர் யாரும் கூட்ட அரங்கில் இல்லை. விவசாயிகளின் கேள்வியின் சாராம்சமே தெரியாமல், மின்வாரியம் சார்பில் பங்கேற்ற அலுவலர் தடுமாறினார்.விவசாயிகள் சங்க பிரதிநிதி அப்புசாமி பேசும்போது, 'தொலை துாரங்களிலிருந்து, குறைகளை சொல்ல அதிகாரிகளை தேடிவருகிறோம். ஆனால், அதிகாரிகளோ பங்கேற்பதில்லை; விவசாயிகளின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் இல்லை; குறிப்பிட்ட நாட்களுக்குள் பதில் கூட அளிப்பதில்லை' என ஆதங்கத்தை கொட்டினார். குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயிகளின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, குறைகேட்பு கூட்டம் மீதான நம்பிக்கையை நிலை நிறுத்த சப்கலெக்டர் சாட்டையை சுழற்றவேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி