உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட்கா விற்பனை கடைக்கு சீல்

குட்கா விற்பனை கடைக்கு சீல்

அவிநாசி : அவிநாசி, சக்தி நகர் பகுதியில் பேன்ஸி கடை நடத்தி வருபவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையா 46.இவரது கடையில்,தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சுப்பையாவுக்கு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, 90 நாட்கள் கடையை திறக்க தடைவிதித்து சீல் வைத்தனர்.அதேபோல,அவிநாசி கமிட்டியார் காலனியில், பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் மணி 55. இவரது கடையிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்து, 25 ஆயிரம் ரூபாய் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை