உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச பல் மருத்துவ வாகனம் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு

இலவச பல் மருத்துவ வாகனம் பயன்பாட்டுக்கு ஒப்படைப்பு

உடுமலை:உடுமலை ரோட்டரி சங்கம் சார்பில், நடமாடும் இலவச பல் மருத்துவ வாகனம், மக்கள் பயன்பாட்டுக்காக துவக்கி வைக்கும் விழா நேற்று நடந்தது.உடுமலை ரோட்டரி சங்கம் சார்பில், 42 லட்சம் ரூபாய் செலவில், நடமாடும் இலவச பல் மருத்துவ வாகனம் வாங்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்காக துவக்கி வைக்கும் விழா நேதாஜி மைதானத்தில் நடந்தது.வாகனத்தை ரோட்டரி மாவட்ட கவர்னர்கள் இளங்குமரன், தனசேகர் துவக்கி வைத்தனர். விழாவில், உடுமலை ரோட்டரி சங்க தலைவர் ரகுநந்தன்ராஜூ,செயலர் சரவணகுமார், திட்ட தலைவர் கார்த்திகேயன், இணை தலைவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.இந்த வாகனத்தால் திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, பள்ளி மாணவ, மாணவியர், மக்கள், மற்றும் மலைவாழ் கிராம மக்கள் பயன்பெற உள்ளதாக ரோட்டரி சங்கத்தினர் தெரிவித்தனர்.மேலும், ரோட்டரி மாவட்ட அறக்கட்டளை தலைவர் சிவபிரகாஷ், பல் மருத்துவர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து இலவச பல் மருத்துவ முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி