உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஹிந்துக்கள் பக்ரீத் வாழ்த்து

ஹிந்துக்கள் பக்ரீத் வாழ்த்து

திருப்பூர்:திருப்பூரில், பக்ரீத் கொண்டாடிய இஸ்லாமியர்களுக்கு, விநாயகர் கோவில் நிர்வாகம் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.திருப்பூர் முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்டில், செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. சமீபத்தில் இக்கோவில் கும்பாபிஷேக விழாவில் அப்பகுதி இஸ்லாமியர்கள் சீர் வரிசை வழங்கினர்.அதேபோல, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பெரிய பள்ளி வாசலில் தொழுகையை முடித்து வந்த இஸ்லாமியர்களுக்கு செல்வ விநாயகர் கோவில் நிர்வாகிகள், ரோஜா பூ மற்றும் இனிப்பு வழங்கி பக்ரீத் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை