உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மும்பையில் கனமழை; குர்லா எக்ஸ்பிரஸ் தாமதம் 

மும்பையில் கனமழை; குர்லா எக்ஸ்பிரஸ் தாமதம் 

திருப்பூர் : மும்பையில் கனமழை காரணமாக கோவைக்கு வந்து சேர வேண்டிய ரயில் தாமதமாக வந்தது. இதனால், ரயில் புறப்பாடும் தாமதமாகியது.தினமும் காலை 6:50க்கு திருப்பூரை கடந்து, கோவை சென்று சேரும் மும்பை - கோவை குர்லா எக்ஸ்பிரஸ் (எண்:11013) நேற்று ஐந்து மணி நேரம் தாமதமாக, மதியம், 12:10க்கு கோவை சென்று சேர்ந்தது. இதனால், காலை, 8:50க்கு கோவையில் இருந்து மறுமார்க்கமாக புறப்பட வேண்டிய ரயில் (எண்:11014) ஆறு மணி நேரம் தாமதமாக மதியம், 1:18க்கு புறப்பட்டது.காலை 9:30க்கு பதில், மதியம், 2:12க்கு திருப்பூரை கடந்தது. ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்து, காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை