| ADDED : ஜூலை 12, 2024 12:32 AM
திருப்பூர் : நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கான மருத்துவ சேவையை, அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கும் அரசின் ஆம்புலன்ஸ் சேவையை, அவர்களது இருப்பிடத்திற்கே சென்று வழங்கும் அரசின் ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு, ஆட்கள் பணிநியமனம் செய்யப்பட உள்ளனர்.'எம்ரி கிரீன் ெஹல்த் சர்வீஸ்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, இத்திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கென, '1962' என்ற கட்டணமில்லா தொலைபேசி அழைப்பு மூலம், மக்கள் இந்த சேவையை பெற முடியும். இத்திட்டம் மாநிலம் முழுக்க விரைவில் செயல்பாடுக்கு வரவுள்ளது.இந்த ஆம்புலன்ஸ் சேவையில் ஓட்டுனராக பணிபுரிய, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். 24 முதல், 35 வயது வரையுள்ள, 162.5 உயரம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமம் பெற்று, 3 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். 'பேட்ச்' எடுத்து ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.ஆம்புலன்ஸ் உதவியாளர் பணிக்கு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 13 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம்; 19 முதல், 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.மாநிலம் முழுக்க, அனைத்து மாவட்டத்திற்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருப்பூர் மாவட்ட அளவில் விருப்பம் உள்ள நபர்கள், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அரசு மருத்துவமனை பகுதியில் செயல்படும், 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்திற்கு, நாளை, (13ம் தேதி) காலை, 10:00 மணி முதல், 2:00 மணிவரை நடக்கும் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்.நேர்முக தேர்வுக்கு வருபவர்கள், தங்கள் அசல் கல்வி சான்றிதழ் மற்றும் ஓட்டுனர் உரிமம் அவசியம் எடுத்து வர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.