உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி புதிய அலுவலக கட்டடம் திறப்பு

கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி புதிய அலுவலக கட்டடம் திறப்பு

திருப்பூர்;வெள்ளகோவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் புதுப்பொலிவுடன் கூடிய பள்ளி அலுவலக கட்டடம் நேற்று திறக்கப்பட்டது.பள்ளித் தாளாளர் சண்முகம், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குநர் அசோக்குமார், ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர். முதல்வர் விஷ்ணுப்பிரியா, குத்துவிளக்கேற்றி வைத்தார்.பெற்றோர், மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். முதுகலை பட்டதாரி ஆசிரியை விசாலாட்சி நன்றி கூறினார். இனிப்புகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி