உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரைட் பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு

பிரைட் பப்ளிக் பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு

திருப்பூர்:திருப்பூர், காங்கயம் சாலை, விஜயாபுரம் பிரிவில் அமைந்துள்ள பிரைட் பப்ளிக் பள்ளியில், மாணவ, மாணவியர் பதவியேற்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக, அன்பு அறக்கட்டளை தலைவர் வக்கீல் மோகன், பொருளாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்று பேசினர். ஜனநாயக முறைப்படி மாணவர்கள், தங்கள் தலைவர்களை தாங்களே ஓட்டளிப்பின் வாயிலாக தேர்ந்தெடுத்தனர். மாணவர் தலைவராக ஷஹினா, உதவி தலைவராக அஸ்வதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவர்கள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணிக்கென ஒவ்வொரு பொறுப்புகள் வழங்கப்பட்டன. அதன்படி, ஒழுக்கம், சுகாதாரம், விளையாட்டு, கலை ஆகியவை பிரித்து வழங்கப்பட்டன.விழா ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் டாக்டர் பிரபாகுமாரி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை