உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்பால் விபத்து அதிகரிப்பு

ஆக்கிரமிப்பால் விபத்து அதிகரிப்பு

உடுமலை : பொள்ளாச்சி - தாராபுரம், உடுமலை - செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் நால்ரோடு சந்திப்பு பெதப்பம்பட்டியில் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில், சில மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில், தற்காலிக, நிரந்தர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.மீண்டும் தற்போது, ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது. வாகனங்கள் செல்லும் பகுதியில் கூட கடைக்காரர்கள் பல்வேறு பொருட்களை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால், நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இல்லாவிட்டால், தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ