உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடைப்பந்து அணியில் பங்கேற்க விருப்பமா?

கூடைப்பந்து அணியில் பங்கேற்க விருப்பமா?

திருப்பூர்;மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சார்பில், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட கூடைப்பந்து அணித்தேர்வு நடக்கிறது.இன்று, நாளை (6ம் தேதி) மற்றும், 7 ம் தேதி, திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற உள்ள தேர்வில், ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், 16 வயதுக்கு உட்பட்ட ஆண்/பெண் என ஏழு பேர் கொண்ட அணி பங்கேற்கலாம். பங்கேற்பு கட்டணம் எதுவும் இல்லை.தேர்வு செய்யப்படும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை மாவட்ட அணியில் இடம் பெற முடியும். தேர்வு போட்டியில் பங்கேற்பவர், பள்ளி முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரிடம் அடையாளச்சான்று, ஒப்புதல் பெற்று வர வேண்டும். பிறப்புச் சான்றிதழ், ஆதார் கார்டு நகல் அவசியம். மேலும் தகவல்களுக்கு: 9443058880.இத்தகவலை, மாவட்ட கூடைப்பந்துக் கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை