உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளிமாணவ, மாணவியர் சாதனை

ஜெய் சாரதா மெட்ரிக் பள்ளிமாணவ, மாணவியர் சாதனை

திருப்பூர் : திருப்பூர், 15 வேலம்பாளையம், ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பொது தேர்வுகளில் தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வருகின்றனர்.நடப்பாண்டு 10ம் வகுப்பு பொது தேர்வெழுதிய மாணவர்களில், ஆறு பேர் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர். மேகா பிரியதர்ஷினி, ஜித்தேஷ் ஆகியோர், தலா, 495 மதிப்பெண்ணுடன் முதலிடம், சுடலி, ஸ்ரீராம் மற்றும் ஹரீஷ் ஆகியோர் 492 மதிப்பெண்ணுடன் இரண்டாமிடமும், மித்ரா 491 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.இவர்கள் தவிர, எட்டு பேர், 490க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். எழுபது பேர், 400க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். கணிதம், சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் 100 மதிப்பெண், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்ணும் பெற்றனர்.முதல் மூன்றிடம் பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி, கேடயம் வழங்கிப் பாராட்டினார். அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகாவாணி சதீஸ், பொருளாளர் சுருதி ஹரீஷ், பள்ளி முதல்வர் மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ