உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜமாத் கட்டப்பஞ்சாயத்து ஹிந்து முன்னணி சாடல்

ஜமாத் கட்டப்பஞ்சாயத்து ஹிந்து முன்னணி சாடல்

திருப்பூர்:'சிறுமி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்த ஜமாத் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோட்டில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, 60 வயது முதியவரை, ஜமாத் அலுவலகத்தில் கட்டி வைத்து, அவரது வீட்டை விற்று, ஜமாத் எனும் முஸ்லிம் நிர்வாகிகள் குழு, கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஜமாத் நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் ஜமாத்துகள், தனி அரசாங்கம் போல செயல்படுவது ஜனநாயகத்தை சீரழிக்கும். போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை