உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடத்தில் ஜமாபந்தி துவங்குகிறது

பல்லடத்தில் ஜமாபந்தி துவங்குகிறது

பல்லடம் : பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் ஜமாபந்தி நிகழ்ச்சி, பல்லடம் தாலுகாவில் இன்று துவங்குகிறது.சப்-கலெக்டர் சவுமியா தலைமை வகித்து, ஜமாபந்தியை நடத்துகிறார். முதல் நாளான இன்று, பல்லடம் உள் வட்டத்துக்கு உட்பட்ட பணிக்கம்பட்டி, சித்தம்பலம், வடுக பாளையம், பல்லடம், நாரணாபுரம், கரைபுதூர், கணபதிபாளையம் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.நாளை (21ம் தேதி), கரடிவாவி உள் வட்டம், பருவாய், கே.அய்யம்பாளையம், கரடிவாவி, மல்லேகவுண்டம்பாளையம், புளியம்பட்டி, கே. கிருஷ்ணாபுரம், அனுப்பட்டி, 25ம் தேதி, சாமளாபுரம் உள் வட்டம், சாமளாபுரம், இச்சிப்பட்டி, பூமலுார், வேலம்பாளையம், சுக்கம்பாளையம், செம்மிபாளையம், கோடங்கிபாளையம், 26ம் தேதி பொங்கலுார் உள்வட்டம், பொங்கலூர், மாதப்பூர், எலவந்தி, கேத்தனுார், வாவிபாளையம், வே.வடமலைபாளையம், கள்ளிப்பாளையம், காட்டூர் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை