தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜரின், 122வது பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக, திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.அவிநாசி, சேவூர் ரோடு, காமராஜர் நகரில், காமராஜரின் 122வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, 8 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு போட்டி, பள்ளி குழந்தைகளுக்கான காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பற்றிய கட்டுரை போட்டி, உருவப்படம் வரைதல் போட்டி என ஐம்பெரும் விழா நடைபெற்றது. மாரியப்பன், நடராஜன், துாசிமுத்து, சண்முகவேல், வெள்ளைச்சாமி, சித்திரவேல், கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனர். பள்ளி குழந்தைகளுக்கு பேனா, நோட் புக் ஆகியவை வழங்கப்பட்டது.n திருப்பூர் கோன் அட்டை சிறு வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில், எஸ்.வி., காலனி மாநகராட்சி துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், இனிப்பு வழங்கப்பட்டது. சங்க தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.n காமராஜர் கல்வி அறக்கட்டளை சார்பில், அம்மாபாளையம் பஸ் ஸ்டாப்பில் வைக்கப்பட்டுள்ள காமராஜரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். அவிநாசி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. காமராஜரின் புகழ் மற்றும் வாழ்க்கை வரலாற்றை சிறப்பு விருந்தினர் சமர்பா குமரன் சொற்பொழிவாற்றினார். அறக்கட்டளை தலைவர் நடராஜன், அறிவுச்சுடர் அறக்கட்டளை தலைவர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர். பொருளாளர்அப்புசாமி, செயலாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.n தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவை, திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, மாவட்ட தலைவர் கண்ணப்பன் தலைமை வகித்தார். பள்ளி பயன்பாட்டுக்காக பீரோ, மின்விசிறி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் காசிராஜன், பொருளாளர் சாமி, கவுரவ தலைவர் பிரகாஷ், மகளிர் அணி தலைவர் பத்மாவதி, கிளை தலைவர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.n காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில், காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். காமராஜர் குறித்து நிர்வாகிகள் பேசினர். அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், செயலாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.n காரணம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசி ரியர் பத்மாவதி தலைமை வகித்தார். பல்லடம் மேற்கு ஒன்றிய பா.ஜ., பொதுச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் பங்கேற்ற நிர்வாகிகள், குடிநீர் தொட்டியை வழங்கினர். பா.ஜ., நிர்வாகிகள் ஆறுமுகம், சுப்பிரமணி, சேகர், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.n பல்லடம் பி.டி.ஓ., காலனி அரசு துவக்கப்பள்ளியில், தலைமையாசிரியர் ஆனந்தி தலைமை வகித்தார். அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். நிர்வாகிகள் பழனிசாமி, சேரன் செந்துார் ராஜன், ஷேக் மத்துார் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு நகம் வெட்டி, துண்டு, துணிப்பை வழங்கப்பட்டன. அறம் அறக்கட்டளை சார்பில், அருள் பிரசாத், கார்த்திக், ஜாகிர் உசேன் உட்பட பலர் பங்கேற்றனர்.