உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

சென்னை - திருவான்மியூரைச் சேர்ந்தவர் கவுதமன், 29. சைதாப்பேட்டை கோர்ட்டில் வக்கீலாகப் பணியாற்றி வந்தார். கடந்த, 4ம் தேதி இரவு ஒரு மர்ம கும்பல் அவரை தாக்கி கொலை செய்தது. இதனை கண்டித்து திருப்பூரில் இன்று வக்கீல்கள் ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.திருப்பூர் பார் அசோசியேஷன், திருப்பூர் அட்வகேட்ஸ் அசோசியேஷன் மற்றும் திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த வக்கீல்கள், இன்று ஒருநாள் மட்டும் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை