உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பல்லடத்தில் இன்று கள் விடுதலை மாநாடு

பல்லடத்தில் இன்று கள் விடுதலை மாநாடு

பல்லடம்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நடத்தும், கள் விடுதலை மாநாடு இன்று பல்லடத்தில் நடக்கிறது.தமிழகத்தில், கள்ளுக்கு தடையுள்ள நிலையில், பல்வேறு விவசாய சங்கங்களும், அமைப்புகளும் தடையை நீக்க கோரி பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளன. இருப்பினும், தமிழக அரசு செவிசாய்ப்பதாக இல்லை. இச்சூழலில், கள்ளுக்கான தடையை நீக்கி, விவசாயிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், கள்ளை உணவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அரசியலமைப்பு சட்ட நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கள் விடுதலை மாநாட்டை இன்று நடத்துகிறது.பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில் இந்த மாநாடு இன்று காலை, 9:30 மணிக்கு துவங்குகிறது.தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி உட்பட, பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். ''மாநாட்டைத் தொடர்ந்து, கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்கப்படும்'' என, ஈசன் முருக சாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை