உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இணைப்பு சாலை பல்லாங்குழி ;தினமும் விபத்து தொடர்கதை 

இணைப்பு சாலை பல்லாங்குழி ;தினமும் விபத்து தொடர்கதை 

திருப்பூர்:திருப்பூர், அவிநாசி ரோடு - பி.என்., ரோடு இணைப்பு சாலையாக ராம்நகர் ரோடு உள்ளது. பங்களா ஸ்டாப் சிக்னல் கடந்து வளைவில் திரும்பும் வாகனங்கள், விநாயகர் கோவில் வீதி வழியாக ஒரு வழிப்பாதையில் பயணித்து, பி.என்., ரோட்டை வந்தடைகிறது.இச்சாலை துவக்கத்திலே தார் பெயர்ந்து, ஜல்லிக்கற்கள், மண் நிறைந்து காணப்படுகிறது. 100 மீ., மட்டுமே உள்ள இச்சாலை முடியும் இடத்தில், வளைவில் வாகனங்கள் திரும்பும் பகுதியில் பஸ்களே ஆட்டம் காணும் வகையில் குழி உள்ளது. அதிக பாரத்துடன் வரும் லாரிகள் வேகத்தை குறைத்து, அப்பகுதியை கடந்து செல்ல நேரம் எடுத்துக் கொள்கின்றன.புதிதாக வருவோர் தடுமாறி கீழே விழ வேண்டியுள்ளது. தினசரி ஒரு விபத்து, யாரெனும் ஒருவர் தடுமாறி கிழே விழுந்து விடும் நிலை உள்ளது. கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்டோரின் வாகனம் உட்பட உயரதிகாரிகள் பலரும் இதில் பயணிக்கின்றனர். ஆனால், குழியை மூடி சாலையை சீர் செய்ய எந்த முயற்சியையும் நெடுஞ்சாலைத்துறை எடுக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி