உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நியமனங்களில் முறைகேடு? நகராட்சி ஆபீசில் விசாரணை

நியமனங்களில் முறைகேடு? நகராட்சி ஆபீசில் விசாரணை

திருப்பூர்:காங்கயம் நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, அதன் முன்னாள் கமிஷனர் அளித்த புகாரில் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சியில், 2016ல், கொசு ஒழிப்பு பணிக்கு, 40 ஊழியர்கள் நியமனம் செய்து பணியாற்றி வந்தனர். அப்போது கமிஷனராக பணியாற்றிய முத்துக்குமார், 2021 செப்., மாதம் கொசு ஒழிப்பு பணியாளர்கள், 40 பேரை சஸ்பெண்ட் செய்தார்.துறை நிர்வாக ஆணையர் தெரிவித்த உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல், இந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் நிலை நகராட்சிக்கான மதிப்பீடுகளின் படி மருந்து மற்றும் தளவாடங்கள் வாங்கப்படாமல் அதிகளவில் வாங்கப்பட்டுள்ளது. இருப்பு பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை. பெரும் முறைகேடு நடந்துள்ளது.ஆண்டுதோறும் நடக்கும் நிதித்துறை தணிக்கையில் இது குறித்து எந்த தடையும் குறிப்பிடப்படவில்லை. இவை குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், நிதித்தணிக்கை உதவி இயக்குநர் சந்திரேசகர் ஆகியோர் மீது நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய காரணத்துக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று உள்ளாட்சி துறை தலைமை தணிக்கை அலுவலருக்கு புகார் அனுப்பினார்.அதன் படி, உள்ளாட்சி நிதி தணிக்கை, மண்டல இணை இயக்குநர் கதிர்வேல் முன்னிலையில், காங்கயம் நகராட்சி யில் இது குறித்த ஆவணங்கள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த அறிக்கை, தலைமை தணிக்கை அலுவலருக்கு அனுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி