உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணிக்கவாசகர் குருபூஜை

மாணிக்கவாசகர் குருபூஜை

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் கலையரங்கத்தில், மாணிக்கவாசக சுவாமியின் குருபூஜை பெருவிழா நடைபெற்றது.இதில், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் முழுவதும் தேவாரப் பண்ணிசை முறையில் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் குமார சாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் முற்றோதுதல் செய்தனர். முன்னதாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், திருமுறை கண்ட விநாயகர் மற்றும் நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் மாணிக்கவாசக சுவாமி, கூத்தப்பிரானோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சியும், அம்மையப்பருடன், மாணிக்க வாசக சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !