மேலும் செய்திகள்
மலம்புழா அணைக்கு மாணவர்கள் கல்வி சுற்றுலா
6 hour(s) ago
ஒழுக்கம் விழுப்பம் தரும்; மாணவர்களுக்கு அறிவுரை
6 hour(s) ago
திருப்பூர்:சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபு, 35; கட்டட தொழிலாளி. இவரது மனைவி வனிதா, 30. தம்பதிக்கு, இரண்டு வயதில் மதுமித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. பிரபுவின் தாய் மகேஸ்வரி, 55. இவர்கள் திருப்பூர் அருகே சாமளாபுரம், கருகம்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி கட்டட வேலை செய்து வந்தனர்.சில நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு செல்ல பிரபு தன் மனைவியை, குமார் நகரில் உள்ள மனைவியின் பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார். கடந்த 29ம் தேதி இரவு வீட்டுக்கு திரும்பினார். வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாத காரணத்தால், அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டுக்குள் பார்த்த போது, பிரபு மற்றும் தாயார் மகேஸ்வரி ஆகியோர் இறந்து கிடந்தனர். மங்கலம் போலீசார் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் விசாரணையில், கடன் பிரச்னையால், இருவரும் சாணிப்பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரிந்தது. இது குறித்து, மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago