உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அன்னையர் முன்னணி மஞ்சள் தீர்த்தக்குட ஊர்வலம்

அன்னையர் முன்னணி மஞ்சள் தீர்த்தக்குட ஊர்வலம்

பல்லடம்;ஆடி வெள்ளியை முன்னிட்டு, பல்லடம் ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மஞ்சள் தீர்த்த குட ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக, என்.ஜி.ஆர்., ரோட்டில் நடந்த ஹிந்து முன்னணி பொதுக்கூட்டத்துக்கு, மேற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாநில பொது செயலாளர் கிஷோர்குமார், ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தை தொடர்ந்து, பொன்காளியம்மன் கோவிலில் இருந்து மஞ்சள் தீர்த்த குட ஊர்வலம் துவங்கியது. ஈஸ்வரமூர்த்தி, லோகநாதன் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். என்.ஜி.ஆர்., ரோடு, திருச்சி ரோடு, மாணிக்காபுரம் ரோடு வழியாக சென்ற ஊர்வலம் ஜே.கே.ஜே., காலனி மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. அங்கு, மஞ்சள் தீர்த்தத்தால், அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. ---பல்லடத்தில் ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை