உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நெடுஞ்சாலையில் புழுதி: வாகன ஓட்டிகள் கடும் அவதி

நெடுஞ்சாலையில் புழுதி: வாகன ஓட்டிகள் கடும் அவதி

பல்லடம்;பல்லடம் -- பொள்ளாச்சி ரோடு, மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளது. பல்லடத்தை அடுத்த, காமநாயக்கன் பாளையம் - சுல்தான்பேட்டை வரையிலான ரோடு, விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் பணிகள் நடந்து வரும் நிலையில், ரோடு, புழுதி மயமாக காட்சியளிக்கிறது.வாகன ஓட்டிகள் கூறியதாவது: ரோடு விரிவாக்க பணியை முன்னிட்டு ஜல்லிக்கற்கள், துகள்கள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் மீது தண்ணீர் தெளிக்கப்படாததால், மண் புழுதி கிளம்பி ரோடு முழுவதும் புகை மூட்டமாக காணப் படுகிறது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரிவ தில்லை என்பதுடன், ஜல்லி துகள்கள் கண்களை பதம் பார்க்கின்றன.இரவு நேரங்களில், புழுதி காற்றில் பரவுவதால், எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கொளியில், கண்கள் கூசி, விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, புழுதி பறக்காமல் இருக்க, தண்ணீர் தெளிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை