| ADDED : ஆக 01, 2024 10:35 PM
உடுமலை : உடுமலை கல்லுாரியில் தேசிய அளவிலான கருதரங்கம் நடந்தது.உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரி பொருளாதார துறையின் சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்கம் இரண்டு நாட்கள் நடந்தது.'மகளிர் மேம்பாடு முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது' என்ற கருத்தின் அடிப்படையில் இக்கருத்தரங்கம் நடந்தது. துவக்க விழாவில், பொருளாதாரத்துறை தலைவர் கீதா வரவேற்றார்.கல்லுாரி செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். ஆலோசகர் மஞ்சுளா தலைமை வகித்தார். கல்லுாரி பொறுப்பு முதல்வர் பரமேஸ்வரி விழாவை துவக்கி வைத்தார். இதில், தேசிய அளவில் கருத்தாளர்கள் பங்கேற்று பேசினர்.டில்லி, உத்தரகண்ட், அசாம், குஜராத், கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களிலிருந்தும் ஆய்வாளர்கள் பங்கேற்று கட்டுரைகளை சமர்பித்தனர்.இணையவழியில் 60, நேரடியாக 25 கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. நிறைவு விழாவில், பேராசிரியர் ஸ்ரீப்ரியா வரவேற்றார். பொருளாதாரத்துறை இணை பேராசிரியர் ரஜினி நன்றி தெரிவித்தார்.