உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திறந்தவெளி பார் - கழிப்பிடமாக மாறிய அவலம்!

திறந்தவெளி பார் - கழிப்பிடமாக மாறிய அவலம்!

திருப்பூர், : பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், உரிய கண்காணிப்பு இல்லாத காரணத்தால், பொலிவிழந்து வருகிறது. திறந்த வெளி பார் மற்றும் கழிப்பிடமாக காட்சியளிக்கிறது.தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள், பல்லாயிரம் பயணிகள் இந்த பஸ் ஸ்டாண்டை பயன்படுத்துகின்றனர். உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு சுத்தமாக இல்லை.குறிப்பாக, டெர்மினல் பில்டிங் எனப்படும் பிரதான கட்டடத்தில், நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் குப்பை கூளங்கள் இஷ்டம் போல் எறிந்து கிடக்கிறது. வணிக வளாக கடை உரிமையாளர்கள், தங்கள் டூவீலர்களை நிறுத்திச் செல்கின்றனர்.முதல் தளத்துக்கு செல்லும் படிக்கட்டு அமைந்துள்ள பகுதி, பஸ்கள் நிற்கும் இடத்துக்கும் செல்லும் வழியில், பலர் அலங்கோலமாக படுத்து உருள்கின்றனர்.முகப்பு பகுதியை அழகுபடுத்தும் விதமாக பொருத்தியுள்ள கண்ணாடிகளை விஷமிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பல இடங்களில் காலி மது பாட்டில்கள், உடைந்த மது பாட்டில்கள் வீசப்பட்டுக் கிடக்கிறது.முகப்பு பகுதியிலேயே மலம் கழித்தும், சிறுநீர் கழித்தும், வாந்தி எடுத்தும், உணவு பொருட்களை வீசியெறிந்தும் அசிங்கமாகவும், அலங்கோலமாகவும் பஸ் ஸ்டாண்ட் வளாகம் காட்சியளிக்கிறது. கழிப்பிடங்களில் உள்ள குழாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, உரிய பராமரிப்பும் இல்லை.

ஐ.எஸ்.ஓ., எப்படி?

மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகம் கட்டித் திறக்கப்பட்ட போது, இந்த பஸ் ஸ்டாண்ட் முறையாக பராமரிக்கப்பட்டு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என, மேயர் உறுதி கூறினார். ஆனால், இதன் தற்போதைய நிலையை பார்த்தால், ஐ.எஸ்.ஓ., சான்று கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதே உண்மை.இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறுகையில், ''மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சுத்தமாக பராமரிக்கும் வகையில் துாய்மைப் பணியாளர் குழு பணியமர்த்தப்பட்டுள்ளது.விஷமிகள் மற்றும் சம்பந்தமில்லாத நபர்கள் நடமாட்டம், வளாகத்தில் படுத்து உறங்குவது போன்றவை கண்காணிக்க பாதுகாவலர் நியமிக்கப்படுவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை