உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.ஏ.பி., வாய்க்காலில் சீமை கருவேல் காடு

பி.ஏ.பி., வாய்க்காலில் சீமை கருவேல் காடு

பொங்கலுார்:பி.ஏ.பி., பிரதான வாய்க்கால், 124 கி.மீ., நீளமும், கிளை வாய்க்கால்கள் நுாற்றுக்கணக்கான கி.மீ., நீளமும் உள்ளன.பராமரிப்பு இல்லாததால் வாய்க்கால் முழுவதும் சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள், புதர் செடிகள் வளர்ந்துள்ளது. இவை வாய்க்காலே தெரியாத அளவு மூடி உள்ளது. சீமை கருவேல மரங்கள் வாய்க்காலில் கான்கிரீட் கட்டுமானத்தை சேதப்படுத்துகிறது.இவற்றின் விதைகள் அதிக அளவில் வாய்க்காலில் விழுவதால், அவை தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறது. இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சீமை கருவேல் மரங்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவை விவசாய நிலத்தில் வளர்ந்து பெரிதாகி விட்டால் அவற்றை அகற்றுவது கடினம்.இவற்றில் இருந்து விழும் முட்கள், இலைகள் போன்றவற்றால் வாய்க்காலில் அதிகளவு குப்பை சேர்கிறது. இது தண்ணீர் ஓட்டத்தை தடை செய்து நீர் விரயத்தை அதிகரிக்கிறது.இவற்றின் முட்கள் காரின் டயரை பஞ்சராக்கி விடுகிறது. மனிதர்களின் காலில் குத்தினால் அதிக வலியை கொடுக்கும். சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டும் அதிகாரிகள் பாராமுகமாக உள்ளனர். இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை